Select Page

Prem Param - Blog

கருணை

கருணை என்பதன் பொதுவான அர்த்தம் என்னவென்று பார்த்தால், நம்மோடு சம்பந்தப்படாத ஒரு உயிர்மீது நாம் கொள்ளும் அனுதாபத்தை அக்கறையை கருணை என்கிறோம். நம்மோடு சம்பந்தமில்லாத முன்பின் அறியாத ஒருவரிடமோ ஒரு உயிரிடமோ நாம் அன்போடு நடந்துகொள்ளும்போது நமக்கும் கருணை இருக்கிறது என்பதாக நம் மனம் சொல்கிறது. உண்மையில் கருணை என்பது இது மட்டும் அல்ல. கருணை என்பது பல நிலைகளை கொண்டதாக இருக்கிறது. வெறுமனே ஒரு கனிவான நடத்தை மட்டுமே கருணையாகிவிட முடியாது. சில நேரங்களில் கடுமையான பாடங்களும் கூட கருணையில் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகின்றன. ஒரு வைரம் மினுமினுக்க பட்டைத் தீட்டப்படுவதுபோல, கடவுள் அல்லது இயற்கை மனிதனுள் இருக்கும் ஈஸ்வர சைதன்யம் மலர பல்வேறு துயர்களையும் துன்பங்களையும் கொடுப்பதும் ஒருவகையில் கருணையின் அடிப்படையில் தான். அதனை புரிந்துகொண்டு, அந்த துன்ப துயரங்களை தாங்கும் சக்தியை இயற்கையிடமே கேட்டுப்பெற்று அவற்றைக் கொண்டு வாழ்வை புரிந்து வாழ்பவர்களை நாம் ஞானிகள் என்கிறோம். ஒருவகையில் இயற்கைக்கு சமநிலை தான் முக்கியமே ஒழிய கருணை அல்ல, ஆனால் மனிதனில், அவனுடைய விழிப்புணர்வில் கருணையின் பூ மலர்கிறது. அது இயற்கைக்கு அப்பால் செல்கிறது, எல்லா உயிர்கள் மீதும் அது படர்கிறது. ஒரு புத்தரின் இருப்பே கருணையின் அடிப்படையில் தான். அவரை நீங்கள் அங்கே சந்திக்க நேர்ந்தது அவருடைய கருணையால் தான். அவருடைய கருணை என்பதை விட அவருடைய விழிப்புணர்வின் கருணையால் தான். உங்கள் மனம் அந்த கருணையில் கரைந்து மறையும் போது, புத்தரின் உள்ளார்ந்த இருப்பு உங்களுக்கும் எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை முதன்முறை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்த ஒரு நொடி உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு நொடியாக இருக்கிறது. அந்த கணம் உங்கள் வாழ்வின் வரப்பிரசாதம், நம் விழிப்புணர்வின் கருணை தான், அங்கே புத்தராக, அல்லது உங்கள் குருவாக அமர்ந்திருக்கிறது. அதன் கண்களில் தெரிவது உங்கள் விழிப்புணர்வின் கருணை தான். அந்த புரிதலோடு நாம் நம் குருவையோ, கடவுளையோ சந்திப்பதில்லை, எனவே நாம் பல நல்ல கணங்களை தவறவிடுகிறோம். 

ஆனாலும், கருணை என்பது எப்போதும் நம்மிடையே இருக்கும் ஒரு இயல்பான விஷயம். நாம் யாரேனும் விழ நேர்ந்தால், தாங்கிபிடிக்க ஓடுவது, தண்ணீரோ உணவோ கேட்டால் தயங்காமல் கொடுப்பது, யாரேனும் உதவினால் நன்றி சொல்வது, பிறருக்கு உதவ முயல்வது முற்படுவது என கருணையின் சிறு கீற்றுக்கள் நம் வாழ்வில் எப்போதும் நுழைந்தபடியே இருக்கின்றது. மனிதனால் மட்டுமே பிறர் வேதனையை, துயரத்தை தன் துயராக பாவிக்கும் சக்தி உள்ளது. அந்த பாவனை, அந்த பாவிக்கும் சக்தியை இந்த மனித மனதிற்கு கொடுப்பது நம் விழிப்புணர்வு தான். அந்த பாவனையின் வெளிப்பாட்டை நாம் கருணை என்கிறோம். ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் உயிரை அல்லது தன் விழிப்புணர்வை காணும் சக்தியே கருணை. அந்த கருணையின் அடிப்படையில் செயல்படும் போது அங்கே இரு அல்லது பல உயிர்களுக்கு இடையில் ஒரு பேரன்பு மலர்கிறது, அது அவர்கள் வாழ்வை, மனநிலையை, பண்பை மேம்படுத்துகிறது. அது விழிப்புணர்வை, அன்பை நோக்கி அந்த உயிர்களை உயர்த்துகிறது. 

புத்தரின் கருணை:

ஒரு நாள் ஒரு தாய் தன் இறந்த பிள்ளையை கையில் எடுத்துக்கொண்டு, புத்தரிடம் கண்ணீருடன் ஓடி வந்தாள். “புத்தா, நீங்கள் மக்களுக்கு நல்வாழ்வளிப்பவர் என்று ஊரெல்லாம் கூறுகிறார்கள். தயவு செய்து என் மகனை பிழைக்கச் செய்யுங்கள். இந்த அபலைக்கு அருளுங்கள்” என்று அழுது புலம்பினாள். இதை கண்ட புத்தர் “அம்மா, உன் பிள்ளையை பிழைக்க வைக்க ஏற்பாடுகள் செய்யலாம், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை” என்றார். “என்னவென்று கூறுங்கள், உடனே செய்கிறேன்” என்றாள் அந்த தாய். அதற்கு புத்தர் “அதிகமாக ஒன்றுமில்லை, யார் குடும்பத்தில் இறப்பே நிகழவில்லையோ அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கையளவு கடுகு மட்டும் வாங்கிவா போதும்” என்றார். அந்த தாயோ இதோ போகிறேன் என்று விரைந்தாள். வீடு வீடாக சென்று புத்தர் சொன்ன நிபந்தனையை கூறி கடுகு கேட்டாள். ஆனால் யாரும் கடுகு தர இயலவில்லை. ஒரு பண்ணையார் அவளிடம், “அம்மா, உன் வேதனை புரிகிறது, நான் மூட்டைக்கணக்கில் கூட கடுகை அனுப்பிவிடுவேன், ஆனால் இறப்பு என்று ஒன்று நடக்காத குடும்பம் இவ்வுலகில் இருக்கவே முடியாதே” என்று கூறி வருந்தினார். அப்பொழுது தான் அந்த தாய்க்கு புத்தர் சொன்னதன் சூட்சமம் உரைத்தது. அவள் மனம் நிதானமடைந்தது. அவள் நடை மாறியது, அவள் முகத்தில் ஒரு தெளிவு தென்பட்டது. மீண்டும் திரும்பி வந்து புத்தரிடம் மண்டியிட்டாள். நீங்கள் எனக்கு புரிய வைத்துவிட்டீர்கள். உலகில் இறப்பு என்பது வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் நிகழ்வதுதான் என்று உணர்ந்துகொண்டேன். என் மகனுக்கான ஈமசடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்கிறேன். மிக்க நன்றி” என்று கூறிவிட்டு தன் இறந்த பிள்ளையை எடுத்துக்கொண்டு இடுகாட்டினை நோக்கி நடந்தாள். இப்போது புத்தரின் கருணை என்பது அந்த பிள்ளையை பிழைக்க வைப்பதாக இருந்திருந்தால், அந்த தாய்க்கு மரணத்தை கண்டு அஞ்சுவது வீண், மரணம் மனிதருள் எப்போதும் நிகழும் ஒன்று என்பது புரிந்திருக்காது. அப்படி புரிய வைத்ததன் மூலம் ஒரு பெண்ணிற்கு மரணத்தின் நிதர்சனத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதன் மூலம் ஒருவரின் வாழ்வில் நிலைமாற்றத்திற்கு உதவுகிறார். ஒரு உண்மையான குருவின் கருணை மற்ற எல்லா கருணையையும் விட உயர்ந்தது.

இந்த கணத்தை கொண்டாடுங்கள்

அந்த துறவிகள் கூடத்தில் புதிதாக சேர்ந்திருந்தார் அந்த இளம் துறவி. மாலை நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மூத்த துறவியிடம் சென்று ஆசிப்பெற்றுவிட்டு தன் அறைக்கு திரும்பினார் துறவி. விடிகாலை தியானத்திற்காக சீக்கிரம் எழுந்தார் அந்த இளம் துறவி. வெளியே வந்து பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்..அந்த மூத்த துறவி மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார். இந்த இளம்துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “என்னடா இந்த மனிதர் இப்படி குதிக்கிறார்..ஆடுகிறார்..பாடுகிறார்?..ஒருவேளை இவருக்கு பைத்தியமோ” என்று நினைத்துகொண்டார். பிறகு அடுத்த கட்ட வேலைகள் வந்து சேர..இந்த விஷயத்தை மறந்து போனார். இரவு படுக்க போகும் போதும் இதே போல மூத்த துறவி குதித்தாடி கொண்டே தன் அறைக்கு செல்வதை இந்த இளம்துறவி பார்த்துவிட்டார். “என்ன இந்த மனிதர் இப்படி செய்கிறாரே..குழந்தைதனமாக அல்லவா இருக்கிறது” என்று நினைத்தபடியே தூங்கிப்போனார். அடுத்த நாள் காலையும் அதே போல் மூத்த துறவி குதியாட்டம் போட..  இந்த இளம்துறவிக்கு ஆர்வம் தாங்கவில்லை.. நேரடியாக கேட்டே விடுவது என்று முடிவு செய்து அவரை நெருங்கினார். மூத்த துறவி இவரை பார்த்து புன்னகைக்க.. இவர் தன் சந்தேகத்தை கேட்டார் : “அய்யா, கடந்த இரண்டு நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்..நீங்கள் தினசரி காலையும் இரவு தூங்க செல்வதற்கு முன்னும் இப்படி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறீர்கள்..இது ஏன்? அப்படி என்ன விஷயத்தை சாதித்ததால் இந்த மகிழ்ச்சி? எனக்கும் சொல்லுங்களேன் “ என கேட்கிறார். அந்த கேள்வி மூத்த துறவியை இன்னும் சிரிப்பு மூட்டியது. விழுந்து விழுந்து சிரித்தார்.

இப்போது அந்த இளம்துறவியை பார்த்து கேட்டார் : “எதாவது சாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன?”என்று. இவரும் ”ஆமாம், அதுதானே மகிழ்ச்சி”என்று சொல்ல..

மூத்த துறவி “அப்படி பார்த்தால் நான் இங்கே உன்னோடு பேசிக்கொண்டிருப்பதே சாதனை தான்” என்றார்.

இளம்துறவிக்கு இன்னும் புரியவில்லை. “எப்படி வெறுமனே பேசுவதே சாதனையாகும் ?” என்று கேட்டார்.

துறவி கொஞ்சம் நிதானித்து விளக்கினார் “ இன்று நீ என்னிடம் பேச, இந்த கேள்வியை கேட்க இறைவன் அல்லது இயற்கை உன்னை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறதே..அது சாதனை தான். இன்று காலை நீ மரணத்தை வென்று விழிந்தெழுந்துவிட்டாய். இதோ என் பேச்சை கவனிக்கும் இந்த கணம் நீ மரணமடையவில்லை..எனவே நீ மரணத்தை வென்று வாழ்கிறாய்….இப்படி உலகையே அச்சுறுத்தும் மரணத்தை சர்வ சாதரணமாக வெற்றிகொள்வது சாதனை இல்லையா..இதற்கு நீ மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா?” என்று கேட்கிறார். இளம்துறவியின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி அவரையும் தொற்றிகொள்ள..அவரும் எழுந்து நடனமாட துவங்கி விட்டார்.

…..

இந்த கதையை படித்து முடிக்கும் வரை எல்லாமே சரியாக நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கணினி சரியாக இயங்குகிறது. உங்களுக்கு கண் பார்வை தெரிகிறது. நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். சொல்லப்போனால் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்..எனவே மகிழ்ச்சி கொள்ளுங்கள். நன்றியுணர்வுடன் வாழ்வில் நகருங்கள்.

ஒரு கோப்பை தேநீர்

வாழ்வு, வாழ்தல் அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை குறிக்கும் ஒரு அழகிய ஜென் கதையை படிக்க நேர்ந்தது. அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

அந்த இளவரசர்கள் நாலு பேருக்கும் அந்த துறவியை சந்திக்க அவர் குடிலுக்கு வந்திருக்கிறார்கள். அந்த துறவி அவர்களை வரவேற்று அமர செய்தார். அவர் வந்த விஷயம் என்னவென்று கேட்டார். அந்த இளவரசர்கள் சொன்னார்கள் : ”வாழ்க்கை என்பது என்ன ? இத்தனை துன்பங்களும் வாழ்க்கையின் அங்கமாகி போனதன் சூட்சுமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுகிறோம்” .. என்றனர். துறவி புன்னகை பூத்தார். சரி சற்று பொறுங்கள். டீ சாப்பிட்டுவிட்டு இதை பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார். இவர்களும் ஆமோதித்தனர். சில நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் சில கோப்பைகளுடன் ஒரு கூஜாவில் டீயை ஊற்றி எடுத்து வந்தார் துறவி. தட்டை அவர்கள் முன் வைத்தார். அவரவர்களுக்கு வேண்டிய கோப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார். அந்த தட்டில் இருந்ததோ நான்கு வகையான கோப்பைகள். ஒன்று- சுத்தமான தங்கத்தாலும், மற்றொன்று- சுத்தமான வெள்ளியாலும், மூன்றாவது- சுத்தமான செம்பாலும், நான்காவது- களிமண் கோப்பையாகவும் இருந்தது. இளவரசர்கள் குழம்பினர். ஒருவரை ஒருவர் முறைக்கவே ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்ய..எல்லாருக்கும் தங்க கோப்பை மீதே ஆசை. இப்படியே சில நிமிடங்கள் மவுன போராட்டம் தொடர்ந்தது. இதை பார்த்துகொண்டிருந்த துறவி சொன்னார். “இளவரசர்களே! இதோ இதுதான் வாழ்க்கை ”என்று அந்த சூடான நறுமணம் மிக்க டீயை காட்டினார். ”நீங்கள் கோப்பைக்கு ஆசைப்பட்டு டீயை வீண்டிக்கிறீர்களே..? இது எந்த வகையில் நியாயம்? என்னதான் தங்ககோப்பையில் குடித்தாலும் இதே டீயை தான் குடிக்க போகிறீர்கள். களிமண் கோப்பையிலும் இதே டீதான் கிடைக்க போகிறது! எனவே கோப்பை எது என்பது விஷயமல்ல..டீயை சுவைப்பதே முக்கியம்” என்றார். அவர்களுக்கு அப்போது தான் புரிந்தது : “பணம், அந்தஸ்து, கவுரவம் என்ற கோப்பைகள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அனுபவித்து மகிழவேண்டியது இந்த வாழ்க்கை என்கிற டீயை தானே வேறொன்றுமில்லை..” என்பதை இந்த கதை குறிப்பிடுகிறது.

நமக்கு கிடைத்திருக்கும் விழிப்புணர்வை கொண்டு தான் நாம் வாழ்வை அனுபவிக்கிறோம், இந்த குருட்டு சமூகம் கற்றுக்கொடுக்கப்பட்ட மதிப்புகளை, உயர்வு தாழ்வுகளை நம்பி நாம் வாழ்வை வீணடித்துகொள்ளாமல், கணத்திற்கு கணம் அதை சுவைத்து வாழ்வது நலம்.

கண்ணனைப் பற்றி -1

என்னை பொறுத்தவரை, வெல்ல விரும்பாதவனே வெல்கிறான்; வெல்ல நினைப்பவன் தோற்றுவிடுகிறான்!

அந்த கதைகள் எல்லாம், நான் புரிந்துகொண்ட அளவில், இதைத்தான் சொல்கின்றன. வெல்லும் ஆசைக்குள், தோல்வி ஒளிந்து கொண்டிருக்கிறது, அதன் அடியாழத்தில். இந்த கண்ணன் ஆசையற்றவன் , ஏற்கனவே வென்று விட்டான், இனி வெற்றி அவனுக்குத் தேவையில்லை என்பது பொருள்.  இதை வேறு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். யாராவது ஒருவர் வாழ்வில் வெல்ல ஆசைப்பட்டு, அதற்காகப் போராடுகிறபோது, அடியாழத்தில், ஏதோ இல்லை என்ற தவிப்பு இருக்கிறது; தாழ்வு மனப்பான்மையால் அவர் தவித்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அடியாழத்தில் அந்த தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அதை வெற்றியால் மூடி மறைக்கிறார் என்று அர்த்தம். இதற்கு மாறாக,  வெற்றிகளை விரும்பாத ஒருவர், தன்னுடைய மனத்தில் தாழ்வு மனப்பான்மையின் சிறு சாயல் கூட இல்லாதவராய் இருப்பதால்..எதையும் வெற்றி கொள்ளும் ஆவல் அவரிடம் இல்லை. ஒரு ஜென் குரு தன் நண்பர்களிடம் “நான் சாகும்வரை என்னை யாரும் வெல்ல முடியாது” என்று கூறினார்.
அவருடைய நண்பர்களில் ஒருவர் எழுந்து “ அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். நாங்களும் வாழ்க்கையில்
வெற்றி பெற விரும்புகிறோம். எங்களை யாரும் வெல்லக் கூடாது” என்றார். அந்த குரு சிரிக்க ஆரம்பித்தார். “அப்படியானால் அந்த ரகசியம் உங்களுக்கு விளங்காது. நான் சொல்லிமுடிப்பதற்குள் நீங்கள் குறுக்கிட்டுவிட்டீர்கள். முழுவதுமாய் கேளுங்கள். நான் சொன்னது என்னை வெல்ல யாராலும் முடியாது ஏனென்றால் நான் முழுமையாக தோற்றுவிட்டேன். எனக்கு தோல்விக்கான அச்சமோ, வெற்றிக்கான ஆவலோ இல்லை, எனவே என்னை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னேன் என்றார்.

நம்முடைய அடிப்படை வெற்றிகான வெறியே தோல்விக்கு இட்டுசெல்கிறது. எப்படியும் வாழவேண்டும் என்கிற ஆவலே உங்களை கல்லரைக்கு தள்ளிவிடுகிறது. இன்றைய சமூகத்தில் ஆரோக்கியத்திற்கான அதிகப்படியான அக்கறையே நோய்களில் தள்ளிவிடுகிறது. இயற்கை வித்தியாசமானது. எதன்மீது மிகவும் அன்பு செலுத்துகிறோமொ அதை சீக்கிரமே நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. கண்ணனுக்கு எல்லாமே விளையாட்டு தான். குழந்தைகள் விளையாட்டிற்காகவே விளையாடுகின்றன. அவைகள் அதில் உள்ள வெற்றிக்காகவோ, பெருமைக்காகவோ விளையாடவில்லை. அப்படி விளையாட அவர்கள் ஒன்றும் நம்மை போல் பைத்தியக்காரர்கள் இல்லை. முக்கியமாக கண்ணன் பைத்தியக்காரனில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே? கண்ணனின் விளையாட்டான வாழ்க்கையின் சாராம்சத்தை கொஞ்சமாய் ருசித்துபார்த்துவிட்டோம். அது என்னவென்றால், வாழ்க்கையை அதற்காக மட்டுமே வாழ்வது, லட்சிய வெறி, பண வெறி, காம வெறி, காதல் வெறி(இப்படியும் சிலருண்டு), பதவி வெறி என்கிற எந்த மடத்தனமும் இல்லாமல், வாழ்க்கையை  அதன்வழியிலேயே ஏற்றுகொள்வதே வாழ்வதாகும்.
வெற்றியை பற்றி கவலையே படாதீர்கள், வென்றுவிடுவீர்கள்..!!
வாழ்த்துக்கள்!!

படைப்பாற்றலும் வாழ்வும்

இந்த உலகத்தில் நிலைத்த தன்மை என்ற ஒன்றை நினைத்துபார்க்கவே முடிவதில்லை. இதை இன்றைய விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்தே ஒப்புகொள்கின்றன. காரணம், இயற்கை. இயற்கையின் நியதிகளில் மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமாய் இந்த மாறுதல் கோட்பாடு அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வுலகமும், பிற உலகங்களும், ஏன்..மொத்த பிரபஞ்சமுமே இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட அத்தியாவசிய மாறுதல் விதி நம்மை சுற்றி மட்டுமே நடக்கிறதா என்றால் இல்லை. நமக்குள்ளும்,அதாவது நம்முடைய உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு கூறுகளிலும் ஒரு தொடர் நிகழ்வாக நிகழ்ந்தவண்ணமே உள்ளது. நாம் அன்றைய நாகரிகமற்ற மனிதர்களைப்போல் இல்லை. கல்லை குட்டி தீமூட்டவில்லை. உணவை பச்சையாக உண்பதில்லை. இவ்வளவு ஏன்..80களில் இருந்த மனித சமுதாயத்திற்கும் இப்போது இருக்கும் மனித சமுதாயத்திற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள். இப்படி நம் அழகுணர்ச்சி முதல் நாம் பயன்பாட்டில் ஏற்றுகொண்ட பொருட்கள் வரை அவ்வளவும் தங்கள் நிலையில் இருந்து மருவி, மாறுபட்டு நிற்கின்றன. மாறுபட்டு என்கிற வார்த்தையில் அடியிலும் எதோ ஒரு உட்கருத்து ஒளிந்துள்ளதை நான் உணர்கிறேன். அதுதான் படைப்பாற்றல். படைப்பாற்றல் என்பது ஓவியருக்கோ, பாடகருக்கோ, அல்லது சினிமாக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும் விஷயம் என்றால்,  நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் வீட்டில் தினமும் ஒரே குழம்பும் இட்லியும் செய்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? மனம் புதியதை அல்லது புதுவகையில் அதே விஷயம் மாறி இருப்பதையே விரும்புகிறது. நம் படைப்பாற்றலின் ஊற்று எல்லாருக்குள்ளும் ஒளிந்து நம்மை மாற்றமடையவும், மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கான ஊக்கத்தையும் தந்த வண்ணம் இருக்கிறது. மாற்றங்களை தூண்டும் படைப்பாற்றல் மனித மனத்தில் ஒரு சிறந்த சீரான முதிர்ச்சியை தெளிவை கொடுக்கக்கூடியது. அதன் எல்லைகளை தொட்டவர்கள் துறைசார்ந்த ஞானிகளாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். டாவின்சி முதல் ரஹ்மான் வரை நாம் அவர்களை பெருமையோடு போற்றி வந்துள்ளோம். அப்படிப்பட்ட மாறுதலை தூண்டும் படைப்பாற்றல் எல்லாருக்கும் சொந்தமானது. அதை அனைவரும் சுயமாய் தெரிந்துகொண்டு அதை சிறப்பான முறைகளில் வழிநடத்துவதன் மூலம் தன்னுள்ளும் மேம்பட்டு , மனித சமுதாயத்தையும் மேம்படுத்த முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

மனிதன் என்ற பாலம்

உலகை பார், உலக உயிர்களை பார், மரம், செடி, கொடி, மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் இப்படி அனைத்தையும் பார். அவைகளை வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாது வாழ்கின்றன. அவைகள் அவைகள் தான். அவைகளால் வேறொன்றாய் மாறமுடியாது. நிச்சயமாய் முடியாது. பழமொழிகளில் மட்டுமே பூனை புலியை பார்த்து சூடு போட்டுகொள்ளும். மற்றபடி, எந்த புலியும் பூனையாய் வாழ்ந்ததில்லை. எந்த குருவியும் கழுகாக மாற துடித்ததில்லை. தான் கழுகாய் இல்லையே என்று ஏங்கியதில்லை. ஏன், தான் ஒரு குருவி என்கிற கவனம் கூட அதற்கு இல்லை. அவை அனைத்தும், விதிக்கப்பட்ட படி மட்டுமே வாழ தகுதியுடையவை. ஒரு சிங்கம் பிறக்கும் போதே சிங்கம் தான். ஒரு மாமர விதை, அதை விதையிலிருந்தே மாமரம் தான். அதை நீ பலாமரமாகவோ, தேக்காகவோ மாற்ற இயலாது. அதன் விதி, அதன் விதையிலேயே நிர்யணிக்கப்பட்டாயிற்று. இனி அதற்கு கவலை இல்லை, ஒன்று மாமரமாய் வளரலாம், இல்லையேல்  அழிந்துபோகலாம். இரண்டே வாய்ப்புகள் தான். மாமரம் இல்லையேல் மரணம். (மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி என்பது போல்) 

ஆனால் உன்னை பார், ஒரு மனிதனாய் உன்னை நீயே கவனி, அப்போது ஒரு அதியற்புதமான விஷயம், பளிச்சென்று உனக்கு புரிபடும். அது நீ அளவுகடந்த வாய்ப்பு கொண்டவன் என்பது. நீ உடலில் மனிதன், ஆனால் உள்ளத்தில்? நீ யார்?? சொல்ல தெரியவில்லை இல்லையா. அதுதான் உன் சுதந்திரம், அந்த தடுமாற்றம் இயலாமை அல்ல. அந்த தடுமாற்றம் உன் முன் விரிந்துகிடக்கும் அளவற்ற வாய்ப்புகளால் உண்டானது. அதை பார்த்து வாயடைத்து போவதால் தான் உன்னிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை. எப்போது நீ யார் என்று கேட்டாலும், நீ தெளிவடைந்த நீ, உனக்குள் விரியும் .வாய்ப்புகளை பார்க்கலாம், இப்போதே நீ கடவுளும் ஆகலாம், அல்லது இப்போதே நீ மிருகத்தைவிட கீழ் நோக்கியும் செல்லலாம். அந்த வாய்ப்பு இங்கே உன் முன் நிச்சயமாய் இருப்பது உனக்கு தெரிவதால் தான் உன்னால் “நீ யார்” என்பதற்கு பதிலளிக்கவே முடிவதில்லை.  

பொத்தாம் பொதுவாய், நான் ஆண், நான் முகமதியன், இந்து, கிறுஸ்தவன், அந்த ஜாதி, இந்த இனம் என்று சொன்னாலும், அந்த உள்ளிருக்கும் ஒன்று நீ இதெல்லாம் இல்லை என்று மென்மையாக சொல்லிகொண்டே தான் இருக்கிறது. அதை நீ மறைக்கலாம், அதை நீ மறக்கலாம். அந்த  வாய்ப்பும் கூட உன் கையிலேயே இருக்கிறது. இந்த அளவற்ற சுதந்திரத்தை கவனித்தாயா? எந்த ஒரு மரத்தாலும், மிருகத்தாலும் தன் உள்ளியல்பை மறக்கவோ, மறைக்கவோ இயலாது. எல்லா வகையிலும் மாமரம், மாமரமாகத்தான் மிளிரும். எல்லா வகையிலும் ஒரு மல்லிகைப்பூ மல்லிகைப்பூ வாசமே வீசும். அவைகளால் மறைக்கவோ,மறக்கவோ முடியாது. நிச்சயமாய் முடியாது.  

ஆனால், நீ இந்த அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறாய், நீ மறக்கலாம், மறைக்கலாம், அல்லது நீ உன் உள்ளியல்பை முழுவதுமாய் வெளிப்படுத்தி, இந்த பாலத்தை கடக்கலாம். பாலமா? ஆம் பாலம் தான். மனிதன் ஒரு பாலம் தான். மனித பிறவி ஒரு பாலம் தான். இயற்கைக்கும் இறைமைக்குமான பாலம். மிருகத்திற்கும் கடவுளுக்குமான பாலம். மனிதன் அவனின் உள்ளியல்பு படி வாழ வாழ, அவன் இறைமையை நெருங்குகிறான். அவன் உள்ளியல்பை வெறுத்தோ,மறைத்தோ, மறந்தோ வாழும்பொழுது மிருகத்திற்கும் கீழே செல்கிறான். அதனால் தான் நாம் புத்தரை உயர்த்தியும், ஒரு குடிகாரனை தாழ்த்தியும் பேசுகிறோம். காரணம், குடியில் மனிதன் தான் மனிதன் என்பதையே மறக்கிறான். அவன் “அது”வாக மாறுகிறான். ஒரு உயர்திணை அஃறிணைக்கு தள்ளப்படுகிறது. ஆனால் புத்தன், பாலத்தை கடந்துவிட்டான், அவன் மனிதனையும் கடந்து மேலே எழுந்துவிட்டான், இனி அவன் மனிதன் என்ற சின்ன சிறைக்குள் இல்லை, அதையும் கடந்து, இறைமைக்குள் குதித்துவிட்டான். விழிப்புணர்வே அல்லாத நிலை குடிகாரனுடையது. விழிப்புணர்வின் உச்சகட்டம், புத்தனுடையது. கள்ளுண்டவன் நீரின் 0 டிகிரி என்றால், புத்தன் நீரின் 100 டிகிரி.  

நீ ஓவியனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம், அறிஞனாகலாம், அறிவியல் செய்யலாம், ஆராய்ச்சியாளனாகலாம், புத்தனாகலாம் இப்படி உன்னுடைய சுதந்திரம் அளப்பறியது. நீ உன்னுடைய இயல்பிலிருந்து எழும் எதை செய்தாலும், அது உன்னை இன்னும் மேம்படவே வைக்கும். எனவே, உனக்குள் ஆழ்ந்து போ, உன்னை, உன் நிஜ உன்னை கண்டுபிடி. அதுதான் நீ. மற்றவை எல்லாம் மனதின் பொய் வேஷம்.